ராகவா லாரன்ஸின் சிளப்பான தரமான சம்பவம் ! ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பாராட்டி வருகின்றனர் !
தமிழ் திரைப்பட ராகவா லாரன்ஸ் கொரோனா ஊடங்கில் திண்டாடி வரும் மாற்றுதிறனாளிகளுக்கு நிதி உதவி செய்துள்ளார்.
உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால், ஒருமாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் ஏழை, எளிய மக்கள் தாங்கள் உண்பதற்க்கே உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து பிரபலங்கள், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா ஊடங்கில் திண்டாடி வரும் 50 மாற்றுதிறனாளின் வங்கி கணக்கில் தலா ரூ.25,000 வழங்கியுள்ளார். இந்த செயலை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.