ரபேல் விவகாரம் ! காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -முரளிதரராவ்
ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
ரபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் இது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறுகையில், ரபேல் குறித்து தவறான பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாஜகவின் உட்கட்சி தேர்தல்கள் அனைத்தும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் நிறைவடையும், அதன் பிறகு தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.