ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்பாவு வழக்கில் கடைசி மூன்று சுற்றுகள் அதாவது 19,20,21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை எனவும், 203 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது எனவும், எனவே அந்த வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று தெரிவித்தது.இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…