பேராசிரியர் அன்பழகன் மறைவு – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இந்நிலையில் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 7, 2020
அவரது பதிவில், திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025