நாகர்கோவில் அருகே வாகனச் சோதனையில் தாமரை சின்னம் மற்றும் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இடம் பெற்றிருந்த 10000-க்கும் மேற்பட்ட கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
அதேபோல் தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் தெரிவித்தது.
துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.தேர்தலில் சமயத்தில் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் பறக்கும் படையினரும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் சோதனை மேற்கொண்டு ஆவணமில்லாத பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றது.
கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் நாகர்கோவிலில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது அங்கு வந்த கார் ஒன்றில் நிறைய பெட்டிகள் இருந்தது.அந்த பெட்டியை அதிகாரிகள் பிரித்து பார்த்ததில் பாஜக சின்னமான தாமரை மற்றும் அந்த தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில் சுமார் 10000 மேற்பட்ட கார்டுகள் இருந்தது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…