அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி
சமீபத்தில் அதிமுகவில் இணைந்த ராதாரவி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
ராதாரவி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் இரண்டும் நடித்தும் பிரபலமானவர் ஆவார்.இவர் அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இதில் ஒரு படியாக ராதா ரவி கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார். அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார்.பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார் .இதனால் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராதாரவி.இந்த நிலையில் ராதாரவி பாஜகவில் இணைந்துள்ளார்.சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணைந்தார்.