திமுக-வில் ராதாரவி நீக்கம் விவகாரம்…. தேர்தல் காலத்து நாடகத்தை நடத்துகிறது : தமிழிசை செளந்தரராஜன்
ஜெயலலிதாவையே சட்டமன்றத்துக்குள் அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பரபரப்பான இந்த தேர்தல் களத்தில் பல சுவரசமயமான விஷயங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை நயன்தாராவை விமர்சித்ததாக, நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், திமுக குறித்ததான சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஜெயலலிதாவையே சட்டமன்றத்துக்குள் அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்தான். திமுக பேசின பேச்சை எல்லாம் அச்சில் கூட ஏற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் பேசுகையில், நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம். ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை என்றும் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.