அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த ஆர்.பி.உதயகுமார்..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த ஆர்.பி.உதயகுமார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளரான தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
டீ கடையில் ஆர்.பி.உதயகுமார்
அந்த வகையில், ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அயர்ன் பண்ணும் கடையில், அயர்ன் செய்தார். பின் டீ கடையில் அவரே டீ ஊற்றி தன்னுடன் வந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.