உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதிய கல்விக்கொள்கையை ஆரம்பத்தில் இருந்தே ஏற்கவில்லை, மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை சிறப்பானதாக இருக்கும். தனி கல்வி கொள்கை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
தமிழகத்திற்கு என்று தனி கல்வி கொள்கை உருவாக்குவது பெருமைக்குரிய விஷயம். நமது மாணவர்களுக்கு ஏற்றவாறு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனி கல்வி கொள்கை உருவாக்கப்படும் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் இதுவரை நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது என்றும் உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…