வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!
தமிழக அரசு பொறுப்பேற்றபிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து பேசியிருக்கிறார்.

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கண்டனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. பாஜகவை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இன்று சட்டப்பேரவையில் இது குறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழக அரசு வாங்கும் கடன்களை மூலதனங்களில் செலவு செய்யவேண்டும் எனவும், மற்ற விஷயங்களில் செலவு செய்வது மக்களுக்கு பலன் அளிக்கிறதா? மகளிர் இலவச பேருந்து, உரிமைத் தொகை திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? எனவும் பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் கேள்விஎழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு “மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை, மாநிலத்திற்க்கு வழங்கும் பங்களிப்புத் தொகை என ரூ.2.63 லட்சம் கோடி வராமல் உள்ளது. இது தமிழ்நாட்டின் மீதான கடனில் 32% ஆகும். அதனை முதலில் கொடுக்க சொல்லுங்கள். நாங்கள் கடன் வாங்கும் தோகை மக்களுக்கு பயனுள்ள வகையில் தான் திட்டங்கள் வருகிறது”எனவும் பதில் அளித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து வானதி சீனிவாசன் டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேசினார். இது பற்றிய பேசிய அவர் ” ஒரே துறையில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என மறைமுகமாக பேசியிருந்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி “தேர்தலுக்கு முன்பாக குழப்பத்தை ஏற்படுத்த பூதக் கண்ணாடி போட்டு சில எதாவது கிடைக்குமா என தேடுகின்றார்கள். திமுகவின் சாதனைகளை பார்த்துவிட்டு சாட்டையால் கூட அடித்து கொண்டனர். தமிழக அரசை குறை கூற அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்கிற காரணத்தால் சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எந்த FIR-ன் அடிப்படையில் இந்த மாதிரியான சோதனைகளை நடத்துகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சரியாக வரவில்லை. எங்களுடைய திமுக அரசு 2021 தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என வாக்குறுதி இல்லை. அப்படி இருந்தும் கூட ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறோம். கிட்டத்தட்ட 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன” எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.