பாஜக-வில் இருந்து கே. டி.ராகவன் விலகல்…! இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் – அண்ணாமலை

Published by
லீனா

திரு கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் டுவிட்டரில் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று வெளியான நிலையில் பாஜக பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகி உள்ளார்.

இந்நிலையில், இதுக்குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் என்னை சந்தித்துப் பேசியது உண்மை.

முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.

ஆகவே அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். மறுத்துவிட்டார். ஆனால் அவர் பதிவுகளளை என்னிடம் ஒப்படைக்க அடுத்த நாள் மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன் அவர்கள் வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன்.

அதன்பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டு இருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் “செய்து கொள்ளுங்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன்.

இன்று காலை திரு K.T.ராகவன் அவர்களிடம் பேசினேன் 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன், உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதை தான் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே டி ராகவன் தெரிவித்தார். மேலும் கட்சியின் மாண்பையும், செம்மையையும் கருதி, தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். திரு கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…

33 mins ago

Live : வயநாடு இடைத் தேர்தல் முதல்.. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை.! களம் நிலவரம்…

சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…

54 mins ago

தொடர் சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…

55 mins ago

IND vs SA : இன்று 3-வது போட்டி! வெற்றி வியூகம் முதல்.. கணிக்கப்படும் அணி வரை!

செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…

1 hour ago

தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…

2 hours ago

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

3 hours ago