மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா? அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் – கே.பாலகிருஷ்ணன்

Default Image

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்தல் என மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ட்வீட்.

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக பின் மின்சார கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மின்வாரியத்துக்கான கடனில் ரூ.12,647 கோடி அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை மாற்றி அமைக்கும் படி தமிழக மின்வாரியத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழகத்தில் மின்கட்டணத்தில் திருத்தம் செய்து இன்று முதல் அமலுக்கு வந்தது.

அதுமட்டுமில்லாமல், ஆண்டுதோறும் 6% மின்கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி மின் கட்டணத்தை 6% உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இந்த மின் கட்டான உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம்.

அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் இத்தகைய நாசகர பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.

உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும், பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர். ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது. மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்