தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.நேற்று 2-ம் நாள் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.இந்த சட்டசபை கூட்டத்தில் நெல்லை கண்ணன் ஏன் கைது செய்யப்பட்டார்..?அவர் என தவறு செய்தார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கேள்வி எழுப்பினார்.எ அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி,
எந்த கட்சி தலைவராக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெல்லை கண்ணன் பிரச்சனையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. எந்த தலைவரையும் அப்படி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ,வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டின் உரிமையாளர்கள் புகார் கொடுத்ததன் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கோலம் போடுபவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார்.
நெல்லை கண்ணன் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…