புதுச்சேரி எல்லைகளில் குழப்பம்.! இரு மாவட்ட ஆட்சியர்கள் தீவிர சோதனை.!
புதுசேரி மாவட்ட எல்லைக்குள் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகள் சில இருப்பதால், அந்த மாவட்ட மக்கள் வருவதை தடுக்க புதுச்சேரி அரசு முயன்று வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் புதுசேரியில் தற்போது வரையில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
ஆனால், புதுசேரி மாவட்ட எல்லைக்கு அருகில் இருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இதனால்,மாவட்ட எல்லைகளை புதுசேரி அரசு மூடியுள்ளது. உரிமம் இல்லாமல் யாரும் புதுசேரி மாவட்ட எல்லைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், புதுசேரி மாவட்ட எல்லைக்குள் கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகள் சில இருப்பதால், அந்த மாவட்ட மக்கள் வருவதை தடுக்க புதுச்சேரி அரசு முயன்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் மேலும் ,சில முக்கிய காவல்துறை அதிகாரிகள் புதுச்சேரி மாநில எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், புதுச்சேரி எல்லையில் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடவும், உரிய ஆவணங்கள் இன்றி மாநில எல்லைக்குள் நுழைய முயல்வர்களை திருப்பி அனுப்பவும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.