பெண் ஆளுமைகளை போற்றும் புதிய தலைமுறை ‘சக்தி விருதுகள் 2024’ ஓர் பார்வை.!

Shakti Awards 2024

தமிழக அளவில் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் புதிய தலைமுறை செய்தி நிறுவனம் ,  செய்திகளை சமரசமின்றி மக்களிடையே கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி, சாதனை தமிழர்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தவும் தவறியதில்லை. சாதனை தமிழர்களை அடையாளம் கண்டு அவர்ளுக்கு உரிய அங்கீகாரத்தை கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு விருது நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகிறது புதிய தலைமுறை.

  • தமிழன் விருதுகள்
  • சக்தி விருதுகள்
  • ஆசிரியர் விருதுகள்

என  புதிய தலைமுறை செய்தி நிறுவனம் கடந்த 12 வருடங்களாக தகுதியான சாதனை தமிழர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளித்து வருகிறது.

சக்தி விருதுகளானது, ஆண்டு தோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதங்களில் பிரமாண்டமாக நடத்தப்பட்டு, மார்ச் 8ஆம் தேதி புதிய தலைமுறை செய்தி சேனலில் ஒளிபரப்பு செய்யபடுகிறது. கொரோனா ஊரடங்கு காலமான 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களை தவிர்த்து கடந்த 2023ஆம் ஆண்டு 10வது சக்தி விருதுகள் வழங்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ‘சக்தி விருதுகள் 2024’ விழா நாளை நடைபெற உள்ளது.

சமூகம் தளைக்க  பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரித்து  ஊக்கப்படுத்தும் வகையில் ஆறு பிரிவுகளில் சிறந்த விளங்கும் பெண் ஆளுமைகளுக்கு சக்தி விருதுகள் (Sakthi Awards) வழங்கப்பட்டு வருகின்றன.  பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளுக்கான பரிந்துரைகள் நடுவர் குழுவினரால் ஆராய்ந்து  அதிலிருந்து சிறந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கான விருதாளர்களாள தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த வருடம் பிப்ரவரி 17ஆம் தேதி (நாளை) சனிக்கிழமை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் இந்த விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் விழாவானது மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆண்டுதோறும், தமிழத்தில் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்து வரும் பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக,  சக்தி விருதுகளானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளானது 6 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.

  • தலைமை
  • திறமை
  • துணிவு
  • புலமை
  • கருணை
  • வாழ்நாள் சாதனை

ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கான நபர்களை தேர்ந்தெடுக்க புதிய தலைமுறையானது,  ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளது. அந்த குழுவில் புதிய தலைமுறையை சேந்த நிர்வாகிகள், அதனை சாராத பல்வேறு துறைகளில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர்கள் இடம்பெற்று இருப்பர்.  அந்த குழு மேற்கண்ட பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கும் நபர்களை விருது விழா தலைமை குழுவிடம் கூறிவிடுவார்கள். அதன் பின்னர் விருது வாங்குவோர்கள் மற்றும் அவர்களுக்கு நிகராக விருது கொடுக்க தகுதியானோர் வருகையை உறுதி செய்து  இறுதி பட்டியல் தயார் செய்யப்படும். யார் யார் விருது பெற்று உள்ளனர் என்பது விழா நடைபெறும் அன்றைய தினம் (பிப்ரவரி 17) தான் தெரியவரும்.

2023ஆம் ஆண்டு சக்தி விருதுகள்

கடந்த ஆண்டு தலைமை , திறமை , துணிவு, புலமை, கருணை, வாழ்நாள் சாதனை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சாதனை பெண்களுக்கு வழங்கப்பட்ட விருது விவரங்களை கீழே காணலாம்…

தலைமை :

நேச்சுரல்ஸ் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அழகு நிலையம் தற்போது இந்தியாமுழுக்க  650 க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. அழகுத் தொழிலில் அடையாளமாக திகழ்ந்து வரும் நேச்சுரல்ஸ் நிறுவனர் வீணா குமாரவேல் அவர்களுக்கு சிறந்த தலைமைக்கான சுத்தி விருது வழங்கப்பட்டது.

புலமை :

புலமைக்கான சக்தி விருது இஸ்ரோவில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த அறிவியலாளர் கல்பனா அரவிந்த் அவர்களு வழங்கப்பட்டது. சென்சார் பிரிவில் இளம் விஞ்ஞானியாக இஸ்ரோவில் கால்பதித்து தற்போது அதே துறையில் மூத்த விஞ்ஞானியாக இஸ்ரோவில் தொடர்ந்து வருகிறார்.

துணிவு :

கொரோனா காலத்தின்போது களத்தில் தைரியமாக நின்று போராடிய மருத்துவர் ஜெயந்திக்கு துணிவு விருது வழங்கப்பட்டது. இவர் அப்போது சென்னை ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் முதல்வர் பொறுப்புடன் மக்களை காப்பாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணை :

31 லட்சம் ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆழ்கடலில் நீந்தி கொண்டிருப்பதற்கு காரணமாக திகழும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சுப்ரஜா தாரிணி அவர்களுக்கு கருணைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது.

திறமை : 

கூடைப்பந்து, தடகளம், ஈட்டி எறிதல் என பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை குவித்த சுபஜாவுக்கு திறமைக்கான சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் : 

களத்திலிருந்து நேரடியாக ஆய்வு செய்து தனது எழுத்துக்கள் மூலம் புதுமை செய்தவர் எழுத்தாளர் சிவசங்கரி. மேலும் போதையில் இருந்து விடுபட்டு மாற்று பாதையில் செல்ல பல்வேறு இளைஞர்களுக்கு பாதை அமைத்து கொடுத்தவர் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேற்கண்ட விருதுகள் 2 ஆண்டு  கொரோனா கால இடைவெளிக்கு பின்னர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற புதிய தலைமுறை சக்தி விருது விழாவில் வழங்கப்பட்டவை ஆகும்.

ஆசிரியர் விருது :

புதிய தலைமுறை ஆசியர் விருது வழங்கும் விழாவானது ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. புதுமை, கிராம சேவை, பழங்குடி மேம்பாடு, பெண்கல்வி, செயலாக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாக்கம் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் கல்வி என 9 பிரிவுகளின் கீழ் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழர் விருது : 

புதிய தலைமுறை தமிழர் விருதுகள் வழங்கும் விழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்று வருகிறது.  சமூகம், தொழில், அறிவியல் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட 6 துறைகளில் திறம்பட சாதனை புரிந்து வரும் தமிழர்களை தேர்வு செய்து, ‘தமிழன் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO