மக்களவை தேர்தல்! அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்? பேச்சுவார்த்தைக்கு பின் கிருஷ்ணசாமி பேட்டி

Krishnasamy: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக புதிய தமிழகம் கட்சியுடன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக தொகுதி பங்கீட்டு குழு சந்திப்பு நடத்தி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்துக்கு சென்று அதிமுகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் அதிமுகவின் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் பேச்சுவார்த்தை நடத்னர்.

Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேசிய கிருஷ்ணசாமி, “மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியின் புதிய தமிழகம் இடம்பெறுவது தொடர்பான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஒரு வெற்றிக் கூட்டணியை அமைப்பதே எங்கள் நோக்கம். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று குழுவிடம் தெரிவித்துள்ளோம், அதிமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது, இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Ministery Senthil Balaji
Newzeland MP Dance
Meta Fine
SA vs IND, 4th T20
Rain Update
Kanguva - Review