இதை கலைஞரின் நினைவிடத்தில் வச்சிருங்க – முதல்வரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி..!
இதை கலைஞரின் நினைவிடத்தில் வச்சிருங்க என கூறி முதல்வருக்கு பேனா வழங்கிய சிறுமி.
தமிழகத்தில் அரசால் செயல்பட்டு வரும் திட்டங்களை அவ்வப்போது ஆய்வு செய்யும் வகையில், ‘கள ஆய்வில் முதல்வர்’ எனும் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்வர் வெளியே வந்த போது, காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, முதலமைச்சரிடம் பேனா ஒன்றை காரின் அருகில் சென்று வழங்கினார்.
அந்த மாணவியை வாழ்த்தி எதற்காக இந்த பேனா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார். உடனடியாக சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி அனுப்பியுள்ளார்.