ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
- உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
- ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் தற்போதுதான் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை இப்போது நடத்துவோம், அப்போது நடத்துவோம் எனக் கூறி, அதிமுக அரசு காலம் தாழ்த்தி வந்தது.
“நாளை நல்லாட்சி அமைய,
உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர் !”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் வேண்டுகோள்!
விவரம்: https://t.co/NqfprNaz6Q#dmk #MKStalin pic.twitter.com/eiHupdGcmK
— DMK (@arivalayam) December 24, 2019
அதற்குக் காரணம் மக்களைச் சந்திப்பதற்குப் பயம். மக்களுடைய அவசியத் தேவைகளை நிறைவேற்றி இருந்தால்தானே அவர்கள் முகத்துக்கு நேராகச் சந்தித்து வாக்கு கேட்க முடியும்? இவர்கள்தான் எதையுமே செய்யவில்லையே!
தேர்தலைத் தள்ளி வைக்க எத்தனையோ கற்பனையான காரணங்களை நீதிமன்றத்தில் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், அதிமுக அரசு மக்களை நேரில் சந்திப்பதற்குப் பயம் என்பதுதான் உண்மையான காரணம்.
ஆனால் தற்போது ஊழலில், லஞ்சத்தில், டெங்குகாய்ச்சலில், காசநோயில் என எவையெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அவற்றில் எல்லாம் முதலிடமாக உள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை! இதனால் மக்களுக்குத்தான் வேதனை !எந்த மாநில முதல்வர் மீதும் பதவியில் இருக்கும்போதே கொலைப் புகார் வந்ததில்லை. கொள்ளைப் புகார் வந்ததில்லை.இங்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எனப் பலர் மீதும் ஊழல் புகார்கள், விசாரணைகள், வழக்குகள் என தமிழ்நாட்டு அமைச்சரவையே ஒரு கிரிமினல் கேபினெட்டாக இருக்கிறது. இது இந்திய அளவிலான அவமானம் இல்லையா?இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான முன்னோட்டம்தான் இப்போது வந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.