புரெவி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது..!
வங்க கடலில் மையம் கொண்டு இருந்த புரெவி புயல் கடந்த 2 நாட்களாக நிலைக்கொண்டு இருந்த நிலையில், இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்க கடலில் மையம் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The Well Marked Low Pressure Area over Gulf of Mannar has weakened into a Low Pressure Area over the same region.
— RMC CHENNAI (சென்னை) (@ChennaiRmc) December 6, 2020
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.