‘புரேவி புயல்’- எதற்காக இந்த பெயர் சூட்டப்பட்டது! இதற்கு அர்த்தம் என்ன?
புரேவி என்பது சதுப்பு நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தின் பெயர். இது கடும் புயலையும் தாங்கும் சக்தி கொண்டதால், இந்த புயலுக்கு புரேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரேவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வந்த புயலுக்கு, ஈரான் நாடு ‘நிவர்’ என பெயரிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது உருவாகியுள்ள புரேவி புயலுக்கு மாலத்தீவு பெயர் சூட்டியுள்ளது. மாலத்தீவில் பேசப்படும் தேவிகி மொழியில் ‘புரேவி’ என புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
புரேவி என்பது சதுப்பு நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தின் பெயர். இது கடும் புயலையும் தாங்கும் சக்தி கொண்டது. எனவே தான், இந்த புயலுக்கு புரேவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் புயலுக்கு மியான்மர் நாடு என துகேட்டி என பெயர் வழங்கியுள்ளது.