“புரெவி புயல்”: 11 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
புரெவி புயல் சின்னம் காரணமாக சென்னை முதல் குளச்சல் வரை இருக்கும் 11 துறைமுககளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் காரணமாக சேதங்கள் அதிகம் இல்லை என்றாலும், பல இடங்களில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிவர் புயலின் தாக்கம் முடிவடைந்த நிலையில், தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று இரவு புயலாக வலுவரும். இந்த புயலுக்கு “புரெவி” என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புயல் சின்னம் காரணமாக சென்னை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், பாம்பன், காரைக்கால், குளச்சல் உள்ளிட்ட 11 துறைமுககளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன்காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரைவில் கரை திரும்பநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.