நெருங்கும் புரவி புயல்! பாம்பனுக்கு அருகில் மையம் கொண்டுள்ள புரவி! – வானிலை ஆய்வு மையம்
புரவி புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு புரவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று இலங்கையை கடந்தது. அதனை தொடர்ந்து இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து, தமிழக கடலோர பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது புரவி புயல் பாம்பனுக்கு 90கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் பாம்பனை நெருங்கி வருவதாகவும், இந்த புயல், பாம்பன்-குமரி இடையே நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.