அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக கொடுத்த பூரணம் அம்மாள்

அரசு பள்ளிக்கு மேலும் ரூ. 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை பூரணம் அம்மாள் நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆயி பூரணம் அம்மாள். இவரது கணவர், தனியார் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு காலமானார். இதையடுத்து, அதே வங்கியில் வாரிசு அடிப்படையில் கிளார்க் பணியை செய்து வருகிறார்.

31 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டாலும், தனி ஆளாக நின்று தனது மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்தார் பூரணம். அதன்பிறகு மகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசை மகள் ஜனனி துரதிருஷ்டவசமாக இறந்துபோனார். கணவர் மறைந்த பிறகு தனக்கு உறுதுணையாக இருந்த மகளும் காலமாகி விட்டதால் இடிந்து போனார் பூரணம்.

எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து..! ஆ.ராசாவை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

இதையடுத்து, தனது மகளின் நினைவாக, மதுரை கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தை, அங்குள்ள அரசுப் பள்ளிக்கு பூரணம் கடந்த மாதம் தானமாக கொடுத்தார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 7 கோடி ஆகும். இதையடுத்து குடியரசு தினத்தில் முதல்வரின் கைகளால் அரசின் சிறப்பு விருதை அவர் பெற்றார். இந்த நிலையில் மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு தற்போது கூடுதலாக 91 சென்ட் நிலத்தை பூரணம் தற்போது வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 3.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்