புல்வாமா தாக்குதலில் இறந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் இறந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அஞ்சலிக்கு பிறகு சுப்பிரமணியன் உடல் தூத்துக்குடி சவலாப்பேரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…