“தொட்டாலே உதிர்கிறது;ஆனால்,செலவுக் கணக்கு ரூ.15 லட்சம்” – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

Default Image

புளியந்தோப்பு கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது;இதனால்,மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு கரை ஓரம் உள்ள குடிசைகளில் வாழும் மக்களை வேறு இடத்தில் குடியமர்த்த சென்னை புளியந்தோப்பு கேசவபிள்ளை(கேபி) பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2018 முதல் 2021 வரை கடந்த இரண்டு கட்டங்களாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியது.இதில்,இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள் பங்காற்றியுள்ளன.

அதன்படி,முதற்கட்டப்பணிகள் 2018 முதல் 2020 வரை நடந்த நிலையில் ரூ.112.16 கோடி செலவில் 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகள் 2019 இல் தொடங்கி 2021 வரை நடந்த நிலையில் ரூ.139.13கோடி செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன.பன்னடுக்கு குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும் 14.61 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால்,கட்டிமுடிக்கப்பட்டு இரண்டு, மூன்று ஆண்டுகளே ஆகிய நிலையில்,இந்த அடுக்குமாடி கட்டடங்களின் நிலைமை அதிர்ச்சியடைய வைக்கிறது.ஏனெனில்,சுற்றுச்சுவர், உள்சுவர், மேற்கூரை என அனைத்து பகுதிகளிலும் ஒரு விரலால் லேசாக தொட்டாலே சுவர் பெயர்ந்து மண் கொட்டுகிறது.இதனால்,இங்கு குடியேறியவர்கள், அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளும் நாட்களை கழிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,புளியந்தோப்பு கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது;இதனால்,மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு.

இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்