புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும்…! அமைச்சர் தங்கமணி
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், நிவாரணப் பணிக்கு கூடுதலாக ஆந்திராவில் இருந்து 1000 பணியாளர்கள் நாளை வருகின்றனர்.புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக 3 நாட்களில் மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாலைக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.