புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும் …! அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும் .30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது.500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மின்சாரம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை நகர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.