புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது …! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.இன்று மாலைக்குள் மத்திய அரசு சாதகமான பதிலை அறிவித்துவிடும் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 சதவீத மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.