Pudukottai Loksabha Constituency [File Image]
NOTA : புதுக்கோட்டை தொகுதி மீட்பு குழுவினர் நோட்டாவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இது பெரும்பாலும் மாவட்ட ரீதியிலும், சட்டமன்ற தொகுதி மக்கள் தொகை கணக்கிட்டும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போதும், இன்னும் திருச்சி மாவட்ட மக்களவை தொகுதியுடன் தான் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இதனால், புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டு எடுக்க வேண்டும் என தொகுதி மீட்பு குழு ஒன்று அப்பகுதியினரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழு 2009ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தல்களில் நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த குழுவினரின் பிரச்சார எதிரொலியாக கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 51,000 வாக்குகள் NOTAவுக்கு கிடைத்தன. கடைசியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 43,000 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின.
இந்த முறையும், புதுக்கோட்டை தொகுதி மீட்புக்குழுவினர், புதுக்கோட்டை தொகுதியை மீட்க, NOTA விற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். எப்படியாயினும் புதுக்கோட்டை தனி மக்களவை தொகுதியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…