பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த திங்கள் (தை 1, பொங்கல் தினம்) முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள், செவ்வாய் அன்று பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!
அதே போல மற்ற பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன் விடுதி பகுதியில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 594 காளைகள் பங்குபெற்றன. இன்று காலை முதல் மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் 234 வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் 25 காளைகளை அடக்கி திருச்சி மாவட்டம் சூரியூரை சேர்ந்த சிவா எனும் ஜல்லிக்கட்டு வீரர் முதல் இடத்தை பெற்றார். அவருக்கு முதற்பரிசான பைக் மற்றும் கோப்பையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். சூரியூர் சிவா இன்றைய போட்டியில் 25 காளைகளை அடக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…