புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.!

Pudukottai Vanniyan Viduthi - Jallikattu 2024

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த திங்கள் (தை 1, பொங்கல் தினம்) முதல் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள், செவ்வாய் அன்று பாலமேடு பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி!

அதே போல மற்ற பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன் விடுதி பகுதியில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 594 காளைகள் பங்குபெற்றன.  இன்று காலை முதல் மொத்தம் 7 சுற்றுகளாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் 234 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் 25 காளைகளை அடக்கி திருச்சி மாவட்டம் சூரியூரை சேர்ந்த சிவா எனும் ஜல்லிக்கட்டு வீரர் முதல் இடத்தை பெற்றார். அவருக்கு முதற்பரிசான பைக் மற்றும் கோப்பையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். சூரியூர் சிவா இன்றைய போட்டியில் 25 காளைகளை அடக்கியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack