பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , பாமக_விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதிபடுத்தபட்டுவிட்டது.
இந்நிலையில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளார்.மேலும் இதில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வருடன் அவைத்தலைவர் மதுசூதனன் தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி சார்பில் அதிமுக கூட்டணி ஆதரவுடன் N.R காங்கிரஸ்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் N.R காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கையெழுத்திட்டனர்.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…