தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், பல பிரச்சனைகளை தாண்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பதான் திறக்கப்பட்டது. அதுவும், கிழமைக்கு ஒரு டோக்கன் என்ற முறையில் மதுபானங்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மதுபான பிரியர்கள் மதுக்கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, மது வாங்கி செல்கின்றனர். மேலும் காலை 10 மணி முதல் மாலை 7 வரை மதுக்கடைகள் திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று மதுக்கடைகளை திறக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி என்றும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூர் பேருந்துகள் தனிமனித இடைவெளியுடம் இயக்கவும், அனைத்து வணிக வளாகங்களும், தொழிற்சாலைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…