புதுச்சேரியில் நாளை முதல் பார்களை மூட வேண்டும்- முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் நாளை முதல் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்றவைகளை மூட முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசியல் கட்சி ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் போன்றவைகளுக்கு மார்ச் 31-ஆம் வரை நடத்த கூடாது என்றும் மால்கள், நீச்சல் குளம், திரையரங்குங்கள் என ஆகியவைகளை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாளை(19-03-2020) முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அமர்ந்து மது அருந்தக்கூடிய மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.மேலும் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025