புதுச்சேரியில் 144 தடை உத்தரவை மீறிய 850 பேர் மெது வழக்கு பதிவு!

சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ளது கொரோனா வைரஸ். இதனை தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் இருபத்தி ஒரு நாளைக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் 850 க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்கள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டிய இந்த காலகட்டத்தில், புதுச்சேரி மக்கள் இவ்வாறு செய்தது நிச்சயம் தன்னிலை மறந்து தொழில் செய்யும் காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.