புதுச்சேரி, காரைக்காலில் இன்று மற்றும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

Default Image

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்