தெருவில் இறங்கி கிருமி நாசினி தெளித்த புதுச்சேரி முதல்வர்.!
இந்தியாவில் கொரோனா வைரசால் 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 86 பேர் குணமடைந்துள்ளர்கள் என மத்திய சுகதர்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒரு பலியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைகள் எடுத்து வருகிறது. இதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரைஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் நாராயணசாமி தமது நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அங்குள்ள மார்க்கெட்டில் ஆய்வு செய்த அவர் பொதுமக்கள் இடைவெளி விட்டு பொருட்கள் வாங்குவதற்கும் முக கவசம் அணிவதற்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து வெண்ணிலா நகரில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட போது, முதலமைச்சர் ஊழியர்களிடம் இருந்த மருந்து தெளிப்பானை வாங்கி தெரு முழுவதும் இரண்டு பக்கமும் மருந்து அடித்தார் முதலமைச்சர். புதுச்சேரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.