புதுச்சேரியில் இப்போது நடைபெறும் ஆய்வு போலவே எப்போதும் நடைபெறும் – கிரண்பேடி

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், கூட்டாட்சி தத்துவபடி துணைநிலை ஆளுநரும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இனி வரும் காலங்களில் புதுச்சேரியில் இப்போது நடைபெறும் ஆய்வு போலவே எப்போதும் நடைபெறும் தெரிவித்தார்.
மேலும் பொதுப்பணித்துறையில் நடக்கும் மிகப்பெரிய திட்டத்தை ஆய்வு செய்யவுள்ளதாகவும், திட்ட மேலாளர், திட்டத்தின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது சம்மந்தப்பட்ட திட்ட ஒப்பந்ததாரர் அங்கு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆய்வுக்கு பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.