ஆளுநர் தமிழிசையின் செயல் ஏற்புடையது அல்ல.! கண்டனத்தை பதிவு செய்த அதிமுக.!
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
புதுசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது முதலமைச்சராக ரங்கசாமி பதவியில் இருக்கிறார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் பதவியில் இருக்கிறார்.
இவர் அண்மையில், புதுச்சேரி ஆளுநர் சார்பாக, முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் , அதன் மூலம் மக்கள் குறைகள் கேட்டறிந்து அதனை நிறைவியேற்றி தர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தங்கள் கண்டனத்தை அதிமுக பதிவு செய்துள்ளது. புதுசேரி அதிமுக மாநில செயலாளர் அன்பாழகன் கூறுகையில், ‘ ஆளுநர் இப்படி செய்வது ஆளும் அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்துவது போல இருக்கிறது.’ என தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் கூறுகையில், ‘ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்தில் இருக்கும் போது ஆளுநர் தனியாக குறைதீர்ப்பு முகாம் நடத்துவது ஏற்புடையது அல்ல. முதலமைச்சரின் அனுமதியோடு தான் துணைநிலை ஆளுநர் அமைச்சர்களை சந்திக்க வேண்டும். இப்படி ஆளுநர் தமிழிசையால் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுவது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’ என அவர் தெரிவித்தார்.