புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே அதிகாரப்போட்டி அதிகரித்து வந்தது.இதன்விளைவாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண் பேடி தலையிடக்கூடாது என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் இது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மோதல் குறைந்த பாடில்லை.
இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு முதலமைச்சர் நாராயணசாமி மீது கடந்த சில நாட்களாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.இதனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்தார் தனவேலு.அதாவது முதல்வா், அமைச்சா்கள் மீது புகாா் தெரிவித்தாா்.எனவே இதற்கு மத்தியில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி அரசுக்கு தொல்லை தரும் ஆளுநர் கிரண்பேடியை மாற்ற பிரதமரிடம் வலியுறுத்தினேன் .என் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகாரை நிரூபித்தால் பதவி விலக தயாராகவுள்ளேன் .திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக தான் உள்ளது என்று தெரிவித்தார் .
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…