எங்களுக்குள் அண்ணன் – தங்கை பிரச்சனை தான்.! முதல்வரிடம் பேசி தீர்த்து வைப்பேன்.! தமிழிசை விளக்கம்.!
நான் விரைவில் முதல்வர் ரங்கசாமி அண்ணனிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனையோ அதனை தீர்த்து வைப்பேன். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
புதுச்சேரியில் இன்று அப்துல்கலாம் செயற்கைகோள் திட்டம் 2023-ஐ புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை துவங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியது குறித்து பேசியிருந்தார்.
கடந்த வாரம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முதல்வர் கூறுகையில் புதுச்சேரியில் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற காலதாமதமாகிறது. எல்லாவற்றிற்கும் மத்திய அரசை நாடியே இருக்க வேண்டி இருக்கிறது. என குற்றம் சாட்டினார் .
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். எங்களுக்குள் இருப்பது அண்ணன் – தங்கை பிரச்சனை தான் தான். நான் விரைவில் முதல்வர் ரங்கசாமி அண்ணனிடம் நேரடியாக பேசி என்ன பிரச்சனையோ அதனை தீர்த்து வைப்பேன். என கூறினார். யாரையும் மன வருத்தமடைய வைத்துவிட கூடாது என்றுதான் நான் செயல்படுவேன் என்றும் தமிழிசை கூறினார்.