ஆன்லைன் ரம்மி-யை தடை செய்ய மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கடிதம்.!
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். அதிலும், குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தியாவில் பப்ஜி-க்கு ஏராளமான இளைஞர்கள் அடிமையாகி வந்த நிலையில், சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்தது.
தற்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி, இந்த விளையாட்டல் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யவேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில் புதுச்சேரியில் விஜயகுமார் என்பவர் ரம்மி விளையாட்டால் தற்கொலையும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.