புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டேவருவதால், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை. அவர்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை. எனவும், மக்கள் காவல்துறையினரிடம் சண்டைப்போட்டு, தகராறில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறிய அவர், மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…