“உத்தரவை மீறினால் சிறை தண்டனை” புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

Default Image

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டேவருவதால், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச்  31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை. அவர்களுக்கு உயிரைப் பற்றி கவலை இல்லை. எனவும், மக்கள் காவல்துறையினரிடம் சண்டைப்போட்டு, தகராறில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறிய அவர், மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும்  என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
CBSE Exam
Rohit sharma - Ravindra Jadeja - Virat kohli
Loksabha Opposition leader Rahul gandhi
kuldeep or chakaravarthy
PinkAuto
Vijay - Annamalai -Seeman