புதுச்சேரியில் பாஜக போட்டி.? முதல்வர் ரங்கசாமி புதிய தகவல்…

Puducherry CM Rangasamy says about Lok sabha election 2024

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு கட்ட அரசியல் திருப்பங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.   தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக வேலை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கொண்டுள்ள பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் போராடி வருகிறது.

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3 வது நாளாக தீவிரம்..!

இப்படியான சூழலில், புதுச்சேரியில் பாஜக கட்சியை சேர்ந்த நபர் தான் போட்டியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருந்தன. புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளளது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால் , என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தான் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முக்கிய தகவலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு விழாவில் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அரசியல் விழாவில் அவர் பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 2 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் .

மேலும்,  நமது ஆட்சியில் நாம் மக்களிடம் சொன்னதை செய்துள்ளோம். அதனை மக்கள் முன்னர் எடுத்து கூற வேண்டும். நமது கூட்டணி வேட்பாளரை நாம் ஒன்றாக இணைந்து ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும். நமது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று நம்புவோம் என பேசியுள்ளார்.

இதன் மூலம், பாஜக போட்டியிட முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளதாவும், மாறாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது . மேலும், தான் கூறும் பாஜக வேட்பாளரை தான் புதுச்சேரியில் நிறுத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்