வேளாண் சட்டத்திருத்த நகல்களை கிழித்தெறிந்த் புதுச்சேரி முதல்வர்!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருந்ததாக ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், கடுங்குளிரிலும் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர்.
இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அது எதுவும் பலனளிக்காத நிலையில், வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயினும் விவசாயிகள், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி நிறைவேற்றினார். அதுமட்டுமின்றி, புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 புதிய வேளாண் சட்ட நகல்களையும் கிழித்து எறிந்தார், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி. அப்பொழுது பேசிய அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் தேவை, அரசின் திட்டங்களை செயல்படுத்த சுயமாக நிதி ஆதாரத்தை உருவாக்க மாநில அந்தஸ்து வேண்டும் என தெரிவித்துள்ளார்.