பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது தான் கொள்கை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பணத்துக்கு பதில் இலவச அரிசு வழங்குவது என்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்த தீர்மான அறிக்கையுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்தபோது, இதற்கு கிரண்பேடி மறுப்பு தெரிவித்தார்.
இலவச அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் அரிசி தான் வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்குஇடையில் தான் ஆளுநரின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.அப்பொழுது அவர் , புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,எந்த சூழ்நிலையிலும் மாநில அரசின் கொள்கை பணத்திற்கு பதில் இலவச அரிசி வழங்க வேண்டும் என்பது தான்.பணத்திற்கு பதில் இலவச அரிசி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்த பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…