புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை !
இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது.
எனவே தான் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார். இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.