ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறிய புதுச்சேரி!
புதுச்சேரியில் கொரோனவால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்த நிலையில், ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியது.
புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அம்மாநிலத்தில் 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அம்மாநிலம், தற்பொழுது சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.