புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியது. 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்த நிலையில், அவர் வராததால் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநர் உரை நிறுத்தி வைப்பதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறி சட்டப்பேரவையை ஒத்திவைத்தார்.
பின்னர், சட்டப்பேரவையில் திட்டமிட்டபடி மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும், புதுச்சேரி உள்ள அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15-ஆம் தேதி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு இட்லி , பொங்கல் மற்றும் கிச்சடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவசமாக லேப்டாப் தரப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…